வலைப்பதிவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள்


தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வலைப்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சேவை வழங்கப்படுகிறது. தங்கள் நூல்களை இந்தப் பக்கத்தில் இணைக்க பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம் - admin@thamizmanam.com

 
பெயர்: மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்.
ஆசிரியர்: வினவு
பக்கம்: 88 விலை: ரூ.35
வெளியீடு: மக்கள் கலை இலக்கியக் கழகம்

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பல்வேறு கோணங்களில் விளக்கி வினவில் ஆறு பாகங்களாக வெளியிடப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. இந்தக் கட்டுரைகளுக்காக ஆதரித்தும், எதிர்த்தும் வந்த பின்னூட்டங்ளும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது தமிழில் புதிய முயற்சி.

கிடைக்குமிடம்:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை
(15ஆவது தெரு அருகில்), அசோக் நகர், சென்னை – 600083
தொலைபேசி: 011- 23718706, செல்பேசி: 99411 75876

மின்னஞ்சல் தொடர்புக்கு: vinavu@gmail.com
தொடர்புடைய சுட்டிகள் http://vinavu.wordpress.com/2009/01/06/bof3/
http://vinavu.wordpress.com/pubs
 
நூலின் பெயர்: திரை கடலோடியும் துயரம் தேடு
நூலாசிரியர்: திருவள்ளுவர்.யோ
விலை: 90.00 ரூபாய். பக்கங்கள்: 152
பதிப்பகம்: ஆழி பதிப்பகம்

அயல் நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. திரவியம் தேடி வளைகுடா நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்கள் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல. மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம் நெஞ்சை உலுக்கக் கூடியது. இந்தப் பிரச்சனைகளுக்கான மூல காரணங்களையும், தீர்வுகளையும் இந்நூல் பேசுகிறது. இந்நூல் புலம்பெயர் தொழிலாளர் நிலமை பற்றி கள அனுபவங்களுடன் தமிழில் வரும் முதல் புத்தகமாக அறியப்படுகிறது.

பிரதிகள் கிடைக்கும் இடம்: ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600024, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 0091 44 43587585
மின்னஞ்சல்: aazhisales(at)gmail(dot)com
இணைய தளம்: www.aazhipublishers.com
 
திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் ஒலிப்பதிவு செய்து MP3 குறுவட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஒரு இலாப நோக்கற்ற வெளியீடு. பனைநிலம் தமிழ்ச்சங்கத்தின் வலைப்பதிவு வாயிலாக இதனை விற்பனைக்கு வைக்கிறோம்.
இக்குறுவட்டினைப் பற்றிய பதிவின் சுட்டி:
http://panainilam.blogspot.com/2009/02/1330.html
 
நூலின் பெயர் :மரணத்தின் வாசனை
ஆசிரியர் :த.அகிலன்
வெளியீடு : வடலி
பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம். -- ஆனந்த விகடனின் கட்டுரையில் இருந்து
கிடைக்குமிடங்கள் : தமிழக முன்னணி புத்தக நிலையங்கள்
விலை இந்திய ரூபா 100
தொடர்புள்ள சுட்டி : http://www.sajeek.com/vadali/Agilan.pdf
 
நகர்க் குருவி : நவீன கவிதைகள், வெளியீடு: மருதா பதிப்பகம், 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை -600 014. முதல் பதிப்பு: 2005 , விலை ரூ 60. நூலைப்பற்றி: இனக்குழு வாழ்வின் தொன்ம நினைவடுக்குகளை மீட்டு வரும் இக்கவிதைகள் நவீன வாழ்வில் நாம் இழந்தவற்றை ஞாநகர்க் குருவி : நவீன கவிதைகள்,
வெளியீடு: மருதா பதிப்பகம், 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை -600 014.
முதல் பதிப்பு: 2005 ,
விலை ரூ 60.

நூலைப்பற்றி: இனக்குழு வாழ்வின் தொன்ம நினைவடுக்குகளை மீட்டு வரும் இக்கவிதைகள் நவீன வாழ்வில் நாம் இழந்தவற்றை ஞாபகமூட்டி துயர்கவியச் செய்பவை. உள்ளீடற்று வெறும் தொழில் நுட்பத்தைக் கவிதையென நம்பும் போலிச்சூழலிலிருந்து விலகி மனிதனுக்கும்- மனிதனுக்கும் , மனிதனுக்கும்- பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை எளிய நடையில் ஈர்ப்பு மிக்கச் சொற்களில் மொழிகின்றன இக்கவிதைகள்.
பகமூட்டி துயர்கவியச் செய்பவை. உள்ளீடற்று வெறும் தொழில் நுட்பத்தைக் கவிதையென நம்பும் போலிச்சூழலிலிருந்து விலகி மனிதனுக்கும்- மனிதனுக்கும் , மனிதனுக்கும்- பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை எளிய நடையில் ஈர்ப்பு மிக்கச் சொற்களில் மொழிகின்றன இக்கவிதைகள்.
 
நூலின் பெயர்: ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்
நூலாசிரியர்: யோ.திருவள்ளுவர்
பதிப்பகம்: ஆழி பதிப்பகம்
பக்கங்கள்: 176 விலை: 80.00 ரூபாய்கள்

வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 3 இலட்சம் தமிழ் மக்கள். வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை உலகின் அதிகார மையங்களின் எல்லா கண்களும், கைகளும் வேடிக்கை பார்த்தன. வன்னிப் படுகொலைகள் திடீரென்று உருவானவையல்ல.

இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளின் ஈழப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட போர், போர் நிறுத்தம், சமாதான முயற்சிகள், படுகொலைகள், வன்னிப் படுகொலைகளின் துயரங்களையும், பேரழிவையும் விரிவாக பதிவு செய்கிறது. சிங்கள பேரினவாதத்தின் தந்திர நாடகங்களை, பிராந்திய, உலக வல்லரசுகள் வகித்த பங்கை, ராஜதந்திர சதித்திட்டங்களைஆதாரங்களுடன் விவரிக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், சிறீலங்காவின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் ஏமாற்றுத்தனங்களையும், அவை உருவான பின்னணியையும் விவரிக்கிறது.

பிரதிகள் கிடைக்கும் இடம்: ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600024, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 0091 44 43587585
மின்னஞ்சல்: aazhisales@gmail.com
இணைய தளம்: www.aazhipublishers.com
 
நூலின் பெயர்: செட்டிநாட்டு மண்வாசனைச் சிறுகதைகள் (முதல் தொகுப்பு)
நூலாசிரியர்: SP.VR. சுப்பையா
160 பக்கங்கள் விலை ரூ.75:00

'ஆச்சிவந்தாச்சு' மாத இதழில் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்ற 20 சிறுகதைகளின் தொகுப்பு நூல். மூத்த தமிழறிஞர் திரு.தமிழண்ணல் அவர்களின் அணிந்துரையால் அல்ங்கரிப்பெற்ற நூல்!

இந்நூலைப் பற்றிப் பதிவர் திரு.உண்மைத்தமிழன் அவர்களின் விமர்சனத்திற்கான சுட்டி - http://truetamilans.blogspot.com/2009/07/blog-post.html பிரதிகள் கிடைக்கும் இடம்: ஆழி பதிப்பகம்

உமையாள் பதிப்பகம்
புது எண்.14 பழைய எண் 94
சொர்ணாம்பிகா லே அவுட்
ராம்நகர்
கோயமுத்தூர - 641 009
அலைபேசி எண்; 94430 - 56624
 
நூலின் பெயர் : பன்றிக்காய்ச்சல்
ஆசிரியர் : மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்

நூல் விபரங்கள் :
பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் ஆகியவை இன்ப்ளுயென்சா நோயின் வகைகளை என்பது துவங்கி, கிருமிகள் எப்படி நோயை உண்டு செய்கின்றன, ஏன் இன்ப்ளூயென்சா மட்டும் இப்படி உலகம் முழுவதும் பரவுகிறது, இதற்கும் முன்னர் எப்பொழுதெல்லாம் ப்ரவியது, இந்த முரை எப்படி பரவியது, இதுவரை நடந்தது என்ன, உலக சுகாதார நிறுவனங்கள், இந்திய அரசு, தமிழக அரசு ஆகியவை என்ன செய்துள்ளன, நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், சிகிச்சைகள், பரிசோதனை குறித்து விளக்கும் நூல்

ISBN 978-81-8493-239-3
பக்கங்கள் 64
அச்சிடப்பட்ட புத்தகம்
முதல் பதிப்பு 2009
கிடைக்கும் இடங்கள்
இணையத்தில் வாங்க இந்த சுட்டிக்கு செல்லவும்
மேலும் விபரங்களுக்கு
நியூ ஹொரிசான் பிரவைட் லிமிடட்
33/15, எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட், சென்னை 600018
தமிழக, இந்தியா
தொலைபேசி : 91 44 4200 9601
தொலைநகல் : 91 44 4300 9701
மின்னஞ்சல் : shop@nhm.in
 
அமினா
ஒரு நைஜீரிய பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கை.
29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை ஈர்த்த முக்கியமான நாவல்.

ஆசிரியர்: முகமது உமர்
தமிழில்: தருமி
சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது. இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்களுக்கு எதிரான ஆதிக்கப் போக்கையும் கடுமையான சட்ட திட்டங்களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சி பூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.

2009 ஆண்டிற்கான சிறந்த மொழியாக்க விருதுகள் இரண்டு இந்நூலுக்குக் கிடைத்துள்ளன. திசை எட்டும் என்ற் நூலின் 2010 நல்லி திசையெட்டும் விருதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2009 ஆண்டிற்கான மாநில இலக்கியப் பரிசும் கிடைத்துள்ளன.

Kizakku,
New Horizon Media Pvt. Ltd;
No. 33/15 Eldams Road,
Alwarpet, Chennai -18
e-mail: support@nhm.in
பக்கங்கள்: 368
விலை: Rs. 200
 
என் செல்ல செல்வங்கள்
துளசி கோபால்
சந்தியா வெளியீடு
பக்கங்கள்:152 | விலை ரூ 80

நூல் கிடைக்குமிடம்:
சந்தியா பதிப்பகம்
57A (77) 53வது தெரு, அசோக்நகர்
சென்னை 600083

தொடர்புள்ள சுட்டிகள்:
http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_22.html
http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post.html
 
தேவதைகள் பற்றிய கவிதைகள் நிரம்ப அடங்கிய தொகுப்பு பரவலான வாசகர்கள், வாசகிகளை இந்த காதல் கவிதைகள் எனக்குப் பெற்றுத்தந்தது. நிறையபேர் செல் பேசியிலும் குறுஞ்செய்தியிலும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தொடர்ந்து அனுப்ப உதவிய நூல் இது.
 
கருவேல நிழல் - கவிதைகள்
ஆசிரியர் - பா.ராஜாராம்
வெளியீட்டாளர் - பொன்.வாசுதேவன்
அகநாழிகை பதிப்பகம்
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603306,
விலை ரூ.40
64 பக்கங்கள்
 
அய்யனார் கம்மா - சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு :

அகநாழிகை பதிப்பகம்,
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் - 603 306.
பேச : 999 454 1010
பதிப்பாளர் : பொன்.வாசுதேவன்
72 பக்கங்கள்
விலை ரூ.40
 
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

தீபச்செல்வன்

விலை:ரூ 60
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை
நாகர்கோவில் -629001
தொலைபேசி: 04652278525

http://www.keetru.com/literature/review/tamilnathy.php
http://deebamvelekkalam.blogspot.com/2009/11/blog-post.html
 
நூலின் பெயர்:’மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்- இந்திய அரசின் கொள்ளைத் திட்டம்’

ஆசிரியர்: பொன்னுசாமி

கிடைக்கும் இடம்: க.ப.வேலுமயில்,
9,வ.உ.சி.நகர் (வடக்கு),
முதல்வீதி,
காந்திநகர்,
திருப்பூர்-641603
கைபேசி: 098418 25578
மின்னஞ்சல்: mithravarshini@gmail.com
வலைப்பூ: ponnusamypalani.blogpsot.com