வலைப்பதிவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள்


தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வலைப்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சேவை வழங்கப்படுகிறது. தங்கள் நூல்களை இந்தப் பக்கத்தில் இணைக்க பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம் - admin@thamizmanam.com

 
குழிவண்டுகளின் அரண்மனை

த.அரவிந்தன்

பக்கம் 80
ரூ.40

வெளியீடு
அருந்தகை
E-220
12-வது தெரு
பெரியார்நகர்
சென்னை - 82


நூல் குறித்து சுகுமாரன்:

அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.புத்தகம் கிடைக்குமிடங்கள்

அருந்தை,E-22-, 12வது தெரு பெரியார் நகர்,
சென்னை -82
அலைபேசி 9282441778
பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை.
நியூ புக்லேண்ட், தி.நகர்.
பரிசல்

 

நிலாரசிகன், சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் தீவிர படைப்பாளி. இது வரை மூன்று கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன.இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. வேட்கையின் நிறங்கள்,யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் சிறுகதைகள் இணைய இதழ்களில் வெளியானபோது பெரும் சலசலப்பையும் பரவலான விவாதங்களையும் உருவாக்கின. அகம் சார்ந்த உணர்வுப்போராட்டங்களை,தொலைத்துவிட்ட கிராம வாழ்வின் பரிவை,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை,சக மனிதர்களின் நம்பிக்கையின்மையை,எதிர்பார்ப்புகளற்ற அன்பை இயல்பாக வாசிப்பவரின் மனதோடு ஒன்றிவிடச்செய்யும் நெருடலற்ற மொழியால் தனித்து நிற்கின்றன இவரது கதைகள்.Publisher: திரிசக்தி பதிப்பகம்
கிடைக்குமிடம் :


டிசம்பர் 30,2009 முதல் ஜனவரி 10,2010 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில்(கடை எண்: 207,208,223,224) நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்.

Author: நிலாரசிகன்
Binding: காகித அட்டை
Pages: 88
Size: 145x225 mm
விலை : ரூ.70


இணையத்தில் வாங்க: http://ezeebookshop.com/catalog/product_info.php?products_id=28

மேலதிக தகவலுக்கு:
www.nilaraseeganonline.com

 
நூல்: இணையம் கற்போம்

ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்

தமிழ் இணையம் சார்ந்தும் இணையத்துக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்வியல் சார்ந்தும் எழுதப்பட்டுள்ள 15 கட்டுரைகளின் தொகுப்பு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாகியுள்ளது. இதில் தமிழ் இணைய அறிமுகம்,இணைய இதழ்கள்,இணையக்குழுக்கள், தமிழ் விக்கிப்பீடியா குறித்த அரிய செய்திகள் உள்ளன.தமிழ் இணையத்துக்குப் பாடுபட்ட காசி,முகுந்து,கோபி,விருபா.குமரேசன், திரட்டி வெங்கடேசு ஆகியோரின் நேர்காணல்களும் உள்ளன.இணையத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல தமிழில் இந்த நூல் உருவாகியுள்ளது.வெளியீடு:

வயல்வெளிப் பதிப்பகம்
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்),
கங்கைகொண்ட சோழபுரம்(வழி),
அரியலூர்(மாவட்டம்),தமிழ்நாடு.
612 901

செல்பேசி எண் : + 91 9442029053
மின்னஞ்சல் : muelangovan@gmail.com
வலைப்பூ: http://muelangovan.blogspot.com

 
Naalai Pirandhu Indru Vanthaval (Poetry Collection in Tamil)

Author: Mathangi

First Edition May 2008
நூலாசிரியர் மின்னஞ்சல் முகவரி mathangihere@gmail.com
published by Uyirmmai Pathippagam Chennai

தமிழ்நாட்டில் பிரதிகள் கிடைக்கும் முகவரி:

Uyirmmai Pathippagam
11/29 Subramaniam Street,
Abhiramapuram,
Chennai 600 018
Tele/ Fax: 91-44-24993448
email :uyirmmai@gmail.com

தொடர்புள்ள சுட்டிகள்

http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=151
http://books.dinamalar.com/BookView.aspx?id=16189#
நாளைய முகம் இன்றைய கவிதை--புதியமாதவி, மும்பை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60811132&format=html

மறையாத சிரிப்பின் புது அழகு - மதுமிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10716&Itemid=9&limit=1&limitstart=0

பதிப்பாசிரியர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் குறிப்பு:

கவிதையை தனது சுயத்தின் முழக்கமாக அல்லாமல் தினசரி வாழ்வின் பதிவாகவும் செய்தியாகவும் கதையாகவும் அணுகும் கவிமரபில் புதிதாக இணைந்து கொள்பவர் மாதங்கி. பலமொழி கலாச்சாரம் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாட்டில் வாழும் தமிழர்களின் சுய அடையாளங்களை மிக நேரடியாக எளிய மொழியில் முன்வைக்கும் இக்கவிதைகள் குழந்தைமையின் பரவசத்தையும் அன்னியமாதலின் துக்கத்தையும் வெளிப்படுத்துபவை. இது மாதங்கியின் முதல் தொகுப்பு 
நூலின் பெயர் : கலகத்தை எதிர்நோக்கும் உலகம்
ஆசிரியர்: க.அருணபாரதி
நூல் பற்றிய குறிப்பு:

தமிழ்ச் சமூகத்தின் மீதான உலகமயத்தின் தாக்குதல்கள், தமிழ்ப் பண்பாட்டின் மீதான நுகர்வியப் பண்பாட்டின் தாக்கங்கள், உலகப் பொருளாதாரம், உணவுப் பஞ்சம், தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து க.அருணபாரதி எழுதிய எழுதிய கட்டுரைகள் தொகுப்பு நூல் இது. இது இந்நூலாசிரியரின் முதல் நூல்.


வெளியீடு: பன்மைவெளி பதிப்பகத்தார், தஞ்சை.
பக்கங்கள்: 112
விலை: ரூ.60
கிடைக்குமிடம்:
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்,
44-1, பசனை கோயில் தெரு,
முத்துரங்கம் சாலை,
தியாகராயர் நகர், சென்னை-17.
பேச: 9841949462
 
நூல் : ௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்
ஆசிரியர் : யோசிப்பவர்
பக்கம் : 96 விலை : ரூ.70

மனிதன் நிலவில் கால்பதிப்பதற்கு, ஆரம்ப வித்தாக இருந்தது, ஜூல்ஸ் வெர்னே, ஹெச்.ஜி.வெல்ஸ் ஆகியோர் தங்கள் கற்பனைக் கதைகளில் மனிதர்களை நிலவில் தரையிறக்கியதே. ஆர்தர் கிளார்க் போன்றோரின் கற்பனையில் உருவாகியதுதான், இன்று விண்ணில் வெற்றிகரமாக மிதக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன்கள். விஞ்ஞானக் கதைகளுக்கான களம் என்பது கடல் என்பதையும் தாண்டி அண்டவெளியளவுக்குப் பெரியது. அதில் ஒரே ஒரு சிறிய துகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு எளிய முயற்சியே இந்தப் புத்தகம். விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ள ‘யோசிப்பவர்’இன் இந்த விஞ்ஞானக் கதைகள், இணையத்தில் வெளியானபொழுதே, பலரது பாராட்டுக்களை பெற்றவை.

கிடைக்குமிடம் : Trisakthi Publications
Giriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
ஆன்லைனில் வாங்க : http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85
வலைப்பூக்கள் : http://yosinga.blogspot.com/
http://kathaiezuthukiren.blogspot.com/
http://kurunjeythi.blogspot.com/
http://sinthanaikal.blogspot.com/
மின்னஞ்சல் : yosippavar@gmail.com
 
நூலின் பெயர்: இனப்படுகொலையில் கருணாநிதி-ஆதாரங்களுடன் ஒரு குற்றப்பத்திரிகை
விலை: ரூ.25 (twenty five only)
நூல் கிடைக்கும் இடம்:
இளந்தமிழர் இயக்கம்,
44/1 பஜனை கோயில் தெரு,
முத்துரங்கன் சாலை, தி.நகர்,
சென்னை. கைபேசி: 90950 13809
 
நூலின் பெயர்: துருப்புச்சீட்டு-முத்துக்குமார் வாழ்க்கை (இந்தத் தலைமுறை இளைஞர்களை சமூகப் போராளிகளாக மாற்றியவனின் வரலாறு)

விலை: ரூ.60 (sixty rupees only)
கிடைக்கும் இடம்:
செம்மை பதிப்பகம்,
451, அரசம்மை இல்லம்,
விக்டோரியா காலனி – நான்காம் தெரு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் -613004.
கைபேசி: 90950 13809 , 0436 2246774
 
நூல் : என்னை எழுதிய தேவதைக்கு.... ஆசிரியர் : குகன் காதல் சிறுகதைகள். ஒவ்வொரு தேவதை கடந்து செல்லும்போதும் ஓர் ஆண் எழுதப்படுகிறான். அவள் பார்வையினால் கீறிவிட்டு செல்கிறாள். 'தேவதைக்கு...' என்று ஒருமையில் புத்தகத்தின் பெயர் இருந்தாலும் பல தேவதைகள் பவணி வரும் நூல் இது. இதில் வரும் 'நான்' நீங்களும் தான். தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம் நாகரத்னா பதிப்பகம் 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை - 11 பேசி : 9940448599 தொடர்புள்ள சுட்டிகள் http://guhankatturai.blogspot.com http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=82 http://muthukamalam.com/muthukamalam_puthakaparvai55.htm
 
வெறும் வார்த்தைகள் - கவிதைத் தொகுப்பு ஆசிரியர் : வெ.இராதாகிருஷ்ணன் நூல் கிடைக்குமிடம்: தமிழ் அலை பதிப்பகம், 1, காவலர் குறுந்தெரு, ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15, தொடர்புக்கு: இஷாக் 978 621 8777 ரூபாய் 50/- தொடர்புள்ள சுட்டி: http://www.greatestdreams.com
 
நுனிப்புல் பாகம்- 1 (நாவல்) ஆசிரியர் : டாக்டர் ராதாகிருஷ்ணன் நூல் கிடைக்குமிடம்: நயினார் பதிப்பகம், 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், சென்னை - 603306 தொடர்புக்கு: 00919994541010 தொடர்புடைய சுட்டி: http://www.greatestdreams.com
 
பெங்களூரில் இருக்கும் பிரபல எழுத்தாளர் ஷைலஜாவின் இப்புத்தகத்தில் அவர் எழுதிய 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கலைமகள் கல்கி அமுதசுரபி தினமணி கதிர் இலக்கியபீடம் தினமலர் கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவர் எழுதிய சிறுகதைளின் தொகுப்பு இது. பரிசுகள் வென்றவையும் இதில் அடக்கம். இந்திரா சௌந்தர்ராஜனின் மதிப்புரை ராஜேஷ்குமாரின் அணிந்துரை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் நட்பும் எழுத்தும், இந்நூலசிரியரின் அடக்கமான என்னுரையும் அருமை பெருமைகளை சுவாரஸ்யத்துடன் எடுத்துரைக்கின்றன. இவர் சிறுகதைகள் நாவலக்ள் மற்றும் பல்வேறு கட்டுரைகளைப் படைத்துள்ளார். மேலும் இணையதளங்களிலும் பறைசாற்றி வருகின்றன. இவரது படைப்புகள் அனைத்துக்கும் உற்ற துணையாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வருகிறார், இவரது கணவர் திரு நாராயணன் அவர்கள். ரூபாய் 70 விலையில் இந்தபுத்தகம் கிடைக்குமிடம் திரிசக்தி பப்ளிகேஷன்ஸ் 56/21 முதல் அவென்யூ சாஸ்த்ரிநகர் அடையாறு சென்னை 20 போன் 044-42970800 2446 2220 2444 4440
 
ஈழம் ஆன்மாவின் மரணம் பக்கம் : 100 விலை: ரூ-65 நாட்டு நடப்பு பக்கம் : 160 விலை : ரூ-100 குமுதம் பு(து)த்தகம் வெளீயீடு, 151.புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10. போன் 26422146/45919141 ஈ.மெயில்- puduthagam@kumudam.com தொடர்புக்கு : சுதாகர் 9962090562 பாலா-9840410037 cartoonistbala@gmail.com --
 
நூலின் பெயர்: நியூஸிலாந்து ஆசிரியர் : துளசி கோபால் வெளியீடு: சந்தியா பதிப்பகம் பக்கம்: 352 விலை: 200 ரூ நூல் கிடைக்குமிடம்: சந்தியா பதிப்பகம் 57A (77) 53வது தெரு, அசோக்நகர் சென்னை 600083 தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம் நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை ஹிக்கின் பாதம்ஸ் தொடர்புடைய சுட்டிகள்: http://www.eramurukan.in/tamil/magazines.php?page=2&count=5
 
நூல்: ஆதித்துயர் ஆசிரியர் : ஃபஹீமாஜஹான் http://faheemapoems.blogspot.com jahan.faheema@gmail.com வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம், 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001,தொலைபேசி: 91-4652-278525 நூல் கிடைக்குமிடங்கள் : இந்தியாவில் காலச்சுவடு பதிப்பகம், 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001 தொலைபேசி: 91-4652-278525 தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம் காலச்சுவடு, பழைய எண் 130, புதிய எண் 257 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை 600 005 தொலைபேசி: 91-44-2844 1672, 4215 5972 நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை ஹிக்கிங் பாதம்ஸ் லேண்ட்மார்க் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் இலங்கையில் Poobalasingam Book Depot No 202, Sea Street Colombo - 11 SRI LANKA T.P +94112422321, +94115737586 Islamic Book House, No 77, Dematagoda Road, Colombo - 09, SRILANKA T.P +94112684851, +94112669197 இணையத்தில் பெற்றுக் கொள்ள kalachuvadu@sancharnet.in ஐ அணுகவும்