வரவேற்பு
|
ஆடை வனப்பு அழகைக் கூட்டி
அங்கமெங்கும் வர்ணம் பூத்திருக்க,
உற்றவரை உறவுக்கு உகந்தவரை
அங்குமிங்கும் படபடக்கும்
வண்டு விழிகளால் துழாவி
கண்மலர்களால் வரவேற்று
கோலாடிக் கொண்டாடினாள்.
உடன் தாவிய முத்துக்குழைகளும் ஆரங்களும்
சட்டென இதழ் விரித்த வெண்முத்துக்களுடன்
கூடியாடி குதித்ததில்,
மேடையெங்கும் ...
|
சூரியகாந்தி
|
வானத்து இளவரசன்
இங்குமங்கும் வீசி விளையாடும்
வட்டத்தட்டு
மஞ்சளாய்ச் சிதறி பூவலம் முடித்து
செம்மஞ்சளாகிச் சாயம் போகும்
சாகசக்காரன்
நீர் நிலைகளில் பிம்பமாகி மிதக்கும்
குளிர்-நிலா
வெண்மேகத் திரைச்சீலைளின்
பின்னால் கண்ணாம்பூச்சியாடும்
மாயத்திரள்
மேகங்களுக்கு அப்பால் ஒளிரும் நம்பிக்கை
வானெங்கும் ...
|
மீனும் நானும்
|
கொஞ்சம் கொஞ்சமாய்
மெல்ல அடங்கியது மூச்சு
முதலில் துள்ளி
பின் துவண்டு விழுந்தது
உயிர் துறந்தும்
எமக்குணவாகியது
குழம்பில் தக்கையாய்
கொதித்த போதும்
அதன் உடலெங்கும் சேலை வாசம்
ஏனோ
என் தொண்டைக்குழியில்
மாட்டிக் கொண்டது முள்
(வல்லமை படப்போட்டிக்கு எழுதியது)
|
தலைவனின் தடம்
|
இன்றைக்கேனும்
ஒரு மாமனிதன்
நடந்துவிட மாட்டானாவென
மணல் மெத்தையிட்டு
மரக்குடை விரித்து
காத்திருக்கும் பாதை.
கால்கள் பாவாத அரிய வழியிதென
கண்டுணரும் தலைவன்,
கோடியில் ஒருவன்,
தடம் புரளாத எளியன்,
தடம் பதிக்கும் தருணம்,
பூக்களும் மலர்ந்து
வாழ்த்துக்கள் சொரியும்.
(வல்லமை ...
|
காத்திருப்பு - வல்லமைபடப்போட்டி
|
காத்திருப்பு
அவருக்கெனக் காத்திருந்த
கன்னிப்பொழுதெல்லாம்
கடந்த காலம்!
சீராட்டிய பிள்ளைச் செல்வங்களை
எதிர்பார்த்துப் பூத்திருந்தது
முடிந்த கணங்கள்!
பேரப்பிள்ளையின் தளிர்நடையைக்
காண விழித்திருக்கிறது
முதுமையின் மிச்சம்!
மாறிக்கொண்டே இருந்த காலவோட்டத்தில்
மாறாத ஒன்றாக
எனது காத்திருப்பு!
காத்திருப்பின் பதட்டத்தை;
துருவேறிய கம்பிகளின்
தடம்சுமந்த என் கைகள்
அழியாச் சாட்சி சொல்லும்!
|
லலிதா சஹஸ்ரநாமம் (264-274) (with English meanings)
|
பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்
சிருஷ்டி கர்த்ரீ;
பிரம்ம ரூபா;
கோப்த்ரீ;
கோவிந்த ரூபிணீ;
சம்ஹாரிணீ;
ருத்ர ரூபா;
திரோதானகரீ;
ஈஸ்வரீ;
சதாஷிவா;
அனுக்ரஹதா;
பஞ்ச க்ருத்ய பராயணா;
() கர்தா = செயல் புரிபவர் - செய்பவர்
#264 சிருஷ்டி கர்த்ரீ = பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்
#265 ...
|
லலிதா சஹஸ்ர நாமம் (256 - 263) ( with English meanings)
|
பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்
விஷ்வரூபா;
ஜாகரிணீ';
ஸ்வபந்தீ;
தைஜசாத்மிகா;
சுப்தா;
ப்ராக்ஞாத்மிகா;
துர்யா;
சர்வாவஸ்த விவர்ஜிதா;
() விஷ்வ = அண்டம்
#256 விஷ்வரூபா = பேரண்ட ரூபமானவள்
() ஜாகரித் - விழிப்புடன்
#257 ஜாகரிணீ = விழிப்பு நிலையில் தன்னை அடையாளப்படுத்திக் ...
|
லலிதா சஹஸ்ர நாமம் (249 -255) (with English Meanings)
|
பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்
பஞ்ச ப்ரேதாசனா சீனா;
பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணீ;
சின்மயீ;
பரமானந்தா;
விஞ்ஞான கன ரூபிணீ;
த்யான த்யாத்ரு த்யேய ரூபா;
தர்ம-அதர்ம விவர்ஜிதா;
() பஞ்ச = ஐந்து
ப்ரேத = சவம்
ஆசீனா = அமர்ந்திருத்தல்
#249 ...
|
|
ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 7)
|
காட்சி 9
இடம்: கதிர் வீடு
நேரம்: மாலை 5 மணி 58 நிமிடங்கள்
(சுசீலா வருகிறாள்.)
கதிர்: ஹாய்! ஷார்ப்பா வந்திட்டயே. வா வா
சுசீலா: ஹாய் கதிர். வர சொல்லிருந்தன்னு விஜி ...
|
ஒரு காதல் வந்துச்சோ (நாடகம் - பகுதி 6)
|
காட்சி 7
( இரண்டு மாதங்களுக்குப் பிறகு)
( விஜியும் சுசீலாவும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்.)
விஜி: சுசீ... சுசீலாஆ........
(சுசீலா காதில் வாங்கவில்லை, ஏதோ சிந்தனையில் இருக்கிறாள்)
விஜி: சுசீஈஈ.....என்ன ஆச்சு ...
|
ஒரு காதல் வந்துச்சோ (பகுதி 5)
|
(சலசலத்து ஓய்ந்த மழை போல் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.வினோத் சுசீலாவின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான்.)
சுசீலா: வினோத், மீட் நவீன் காலேஜ் மேட்ஸ்.
வினோத்: அது சரி.. நவீன் யாரு?
சுசீலா(அசடு ...
|
ஒரு காதல் வந்துச்சோ ( பகுதி 4)
|
(இடம்: ஒப்பனை அறை)
கதிர் (மெட்டுடன் முணுமுணுக்கிறான்):
"சகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு...."
(நவீன் இளித்தபடி நிற்கிறான்)
குமார்: கிராம்ஃபோன் கால பாட்டெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமா
சுசீலா: பெருமாளே! இதை எப்படியாவது ...
|
ஒரு காதல் வந்துச்சோ (பகுதி 3)
|
காட்சி 4
இடம் 'ஏ' ப்ளாக் கம்யூனிடி ஹால்.
(அடுத்த இரு வாரங்கள் தீவிர ஒத்திகை.)
சுசீலா : இன்டெராக்டிவ் கேமுக்கு ஐடியா குடுங்க
விஜி: பார்வையாளர்கள குலுக்கல் முறையில கூப்பிட்டு, மேட் ...
|
ஒரு காதல் வந்துச்சோ (பகுதி 2)
|
காட்சி 2
(சுசீலாவும் விஜியும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கின்றனர்.)
விஜி: சுசீ, உன்ன எங்கெல்லாம் தேடுறது? கதிர் காலைல கால் பண்ணான். அவனோட இன்னும் நாலு பேர் தயாரா ...
|
ஒரு காதல் வந்துச்சோ ( நகைச்சுவை நாடகம்) (பகுதி 1)
|
(இடம்: ஏபிசி காலனி.
மங்களம் காபி ஆற்றிக் கொண்டிருக்கிறாள். சபேசன் வழக்கமாக எல்லா ஆண்களையும் போல் பேப்பரில் மூழ்கியிருக்கிறார். சுசீலா குறுக்க நெடுக்க நகத்தைக் கடித்தபடி நடை பயில்கிறாள்.)
மங்களம்: ...
|
|