தமிழ்மணம் பதிவுப்படை குறித்த தகவல்கள்      
தமிழ்மணம் பதிவுப்பட்டை (toolbar) உங்களுக்கு பல வசதிகளை அளிக்கிறது
tamilmanam_toolbar
தமிழ்மணம் பதிவுப்பட்டையை உங்கள் வலைப்பதிவில் இணைப்பதன் மூலம் உங்கள் பதிவில் இடப்படும் மறுமொழிகளை தமிழ்மணம் திரட்ட முடியும். இந்த மறுமொழி சேவை தமிழ்மணத்தின் சிறப்பம்சம் ஆகும். வேறு எந்த மொழி திரட்டியிலும் இல்லாத வகையில் உடனுக்குடன் உங்கள் பதிவின் மறுமொழிகளை உங்கள் வாசகர்களிடம் கொண்டு செல்கிறது. இந்த வசதி தமிழ்மணம் பதிவுப்பட்டை (toolbar) மூலமே சாத்தியமாகிறது. உங்கள் இடுகைகளுக்கு தொடர்ச்சியான வாசகர் கவனத்தை இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கிறது
தமிழ்மணம் பதிவுப்பட்டையை (toolbar) கொண்டு உங்களது எந்த இடுகையையும் மென்நூலாக (PDF) பெற முடியும். மென்நூல் வசதி உங்கள் பதிவை தமிழ் எழுத்துரு (Tamil Font) இல்லாத கணினிகளிலும் உங்கள் பதிவை வாசகர்களிடம் கொண்டு செல்கிறது
உங்கள் இடுகையை வாசகர்கள் விரும்பினால் அந்த இடுகைக்கு வாக்களிக்கும் வசதியை தமிழ்மணம் பதிவுப்பட்டை அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் இடுகையை தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் அதிக கவனம் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது
இவை தவிர இன்னும் மேலதிக வசதியை தமிழ்மணம் தொடர்ந்து வழங்கும். எனவே தமிழ்மணம் பதிவுப்பட்டையை பயன்படுத்துங்கள். இந்த வசதிகளை பெறுங்கள்...