ப்ளாக்கர் பதிவுகளில் தமிழ்மணம் பதிவுப்பட்டையை (toolbar) சேர்ப்பதற்கான செய்வழி
நன்றி : குழலி, பொன்ஸ், யோசிப்பவர்      
1. உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)
2. ஆதாரக்கிடப்புகளை முகாமைப்படுத்து (“Manage Layouts”) பகுதிக்குச் செல்க (இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).
3. மீயுரை சீர்திருத்து (“Edit HTML”) என்கிற பகுதிக்குச் செல்க
4. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க
5. இப்பொழுது மிக முக்கியமான ஒன்று
6. சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற சொடுக்குப் பெட்டியை தேர்வு செய்க.
blogger
7. சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் உள் வைத்து எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து கீழிருக்கும் பெட்டியில் past செய்யவும்
 


8. ”அளி” என்ற பொத்தானை அழுத்தியவுடன் தமிழ்மண கருவிப்பட்டை நிரலி உங்கள் அடைப்பலகை நிரலியில் இணைக்கப்பட்டு மேலே உள்ள பெட்டியில் தெரியும்.

9.மேலே உள்ள பெட்டியின் உள் வைத்து எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து அதை உங்கள் சீர்திருத்துபெட்டி(“EditBox”) பெட்டியில் உள்ளவற்றை நீக்கிவிட்டு past செய்யவும்.

10.அடைப்பலகையை சேமிக்க

மேலதிக தகவல்களுக்கு பார்க்க தமிழ்மணம் பதிவு