வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களுக்கான ஆலோசனைகள்      
வேர்ட்பிரஸ்.காம் (wordpress.com) பதிவுகளில் மீயுரையை மேம்படுத்தும் வசதி இல்லை (Edit HTML Facility). இதன் காரணமாக தமிழ்மணம் பதிவுப்பட்டையை வேர்ட்பிரஸ்.காம் பதிவுகளில் இணைக்க முடியாது. இதற்கு மாற்றாக வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களுக்கு மாற்று ஏற்பாட்டினை தமிழ்மணம் வழங்குகிறது.
தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் ”இடுகைகளைப் புதுப்பிக்க” பெட்டியில் உங்கள் வேர்ட்பிரஸ்.காம் பதிவின் முகவரியை அளித்து ”அளி” என்ற பொத்தானை அழுத்தினால் தமிழ்மணம் உங்கள் புதிய இடுகைகளை திரட்டிக் கொள்ளும்
உதாரணமாக http://panguvaniham.wordpress.com என்ற பதிவை புதுப்பிக்க, கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல தமிழ்மணத்திற்கு உங்கள் பதிவின் முகவரியை அளிக்கலாம்
how_tamilmanam_aggregates_wordpress