Deprecated: Function set_magic_quotes_runtime() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php on line 33

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/auth.php on line 95

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php:33) in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/auth.php on line 176

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php:33) in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/index.php on line 43

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php on line 715
faq_on_v [தமிழ்மணம் தகவல் களஞ்சியம்]

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 142

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 532

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 331

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 532

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 331

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 392

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 424

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/parser.php on line 427

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/html.php on line 141
பொருளடக்கம்

புதிய தமிழ்மணம் பற்றிய கேள்விகள்:

1. இந்த வலைவாசல் எதற்காக? இப்போது இருக்கும் தமிழ்மணம் வலைவாசலை விட இது எவ்விதத்தில் மேம்பட்டது?

இடுகைகள் திரட்டப்படுவதில் தாமதம், தலைப்பு வாரியாக இல்லாததால் விரும்பியதைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதில் உள்ள கடினம், பதிவுகளை சேர்க்கைக்கு அளிக்கப்படுதல்/செர்த்துக்கொள்ளப்படுதல் இவற்றை நிர்வகிப்பதில் ஏற்படும் தாமதம்/வேலை, இந்த வார நட்சத்திரம்/அவரின் அறிமுகம்/கடந்த வார நட்சத்திரங்கள்/அவர் எழுதிய இடுகைகளின் தொகுப்பு போன்றவற்றை எளிதில் காணமுடியாமை, இன்னும் பல சிறுசிறு குறைபாடுகள் இந்த புதிய பதிப்பில் களையப்பட்டுள்ளன. வலைப்பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும் இந்த வேளையில் இந்த எண்ணிக்கையை எதிர்கொள்வதில் பழைய வடிவம் திணறுவது வலைப்பதிவர், வாசகர், நிர்வகிப்போர் ஆகிய எல்லாருக்குமே உணரக்கூடியதாக இருக்கிறது. அதன் விளைவே இப்புதிய வடிவம்.

2.இந்தப் புதிய வடிவத்துக்கு எதற்காக மீண்டும் ஒருமுறை வலைப்பதிவர் தங்கள் பதிவை சேர்க்கைக்கு அளிக்கவேண்டும்? பழையதிலிருந்து எல்லாப் பதிவுகளையும் தானாகவே சேர்த்துக்கொண்டிருக்கமுடியாதா?

பழைய வடிவத்தில் ஒரு பதிவின் மீத்தகவல்கள் (meta info) தமிழ்மணத்திலும், தங்கள் பதிவிலும் வேறுவேறாகக் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும் பதிவரின் மின்னஞ்சல் முகவரியையும் தமிழ்மணம் பெற்றிருக்கவில்லை. இந்தக் காரணங்களால் மீண்டும் ஒருமுறை சேர்க்கைக்கு அளிக்க வேண்டியிருக்கிறது.

3. சேர்க்கைக்கு அளிப்பது எப்படி? சேர்க்கப்பட்டதை எப்படி அறிந்துகொள்வது?

தளத்தின் முகப்புக்குச் சென்று உங்கள் வலைமுகவரியை அளிக்கலாம். வலைமுகவரியிலிருந்து ஆடம் செய்தியோடையைத் தேடி எடுக்கப்பட்டு, அந்த செய்தியோடையிலிருந்து மற்ற மீத்தகவல்கள் உள்வாங்கிக்கொள்ளப்படும். வலைமுகவரியின் சரியான வடிவம், தலைப்பு, கருப்பொருள் உரை போன்றவை அவை. இவை முன்பார்வைக்குக் காட்டப்படுகின்றன. கூடவே விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதிமொழியுடன், மின்னஞ்சல் முகவரியும் கேட்கப்படும். இவற்றை அளித்தவுடன், சேர்க்கைக்கான காத்திருப்பட்டையலில் அந்த வலைப்பதிவு வைக்கப்படும். இது பற்றிய தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இதே தகவல் நிர்வாகிகளுக்கும் அனுப்பப்படும்.

சேர்க்கை நிலவரத்தை அறிய இந்த முகவரிக்கு செல்லலாம்.

சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டவுடன், மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். தமிழ்மணம் முகப்பில் ‘புதிதாக இணைக்கப்பட்ட பதிவுகள்’ என்ற தலைப்பில் இந்தப் பதிவு தெரியும்.

4. சரி, சேர்க்கை ஆகிவிட்டது, அடுத்து என்ன செய்யலாம்? செய்யவேண்டும்? திரட்டி இனி தானாக இடுகைகளைத் திரட்டிக்கொள்ளுமல்லவா?

இல்லை, இந்தத் திரட்டி இடுகைகளைத் தானாகத் திரட்டுவதில்லை. ‘அப்படியானால் இது மேம்பாடா, சறுக்கல் அல்லவா?’ என கேள்வி எழுகிறதா? இல்லை.

தானாகத் திரட்டும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை (உதாரணமாக ஒரு மணிக்கொருமுறை) மட்டுமே புது இடுகைகள் சேர்க்கப்படுகின்றன. இந்தப் புதிய முறையில் அப்படியல்லாமல் எழுதிய உடனே அந்த நிமிடத்திலேயே இடுகைகளைச் சேர்க்கமுடியும். மேலும் அவ்வாறு வலைப்பதிவர் திரட்டிக்கு சேர்ப்பதால்தான், இடுகைவாரியான வகைப்படுத்தல் சாத்தியமாகிறது. இவை மேம்பாடே ஆகும்.

எனவே, அடுத்து செய்யவேண்டியது, தங்கள் இடுகைகளை திரட்டியில் சேர்த்தல். இதை இரு வழிகளில் செய்யலாம்:

முதல்வழி, ‘பதிவு’ கருவிப்பட்டை மூலம். உதாரணம் வேண்டுவோர், பத்ரி, கோபி, தங்கமணி ஆகியோருடையதைப் பார்க்கலாம். இப்போது நீங்கள் காணும் பட்டை, வாசகர் பட்டையாகும். சரியாக நிறுவப்பட்டிந்தால் ஒரு புது இடுகையை நீங்கள் எழுதியவுடன், அந்தப் புது இடுகையைத் திறந்ததும், இதே வாசகர் பட்டையினிடத்தில், ஒரு பதிவர் பட்டை கிடைக்கும். அதில் மேலதிகமாக இரு அம்சங்கள் உண்டு.\\முதலில், அங்கே தெரியும் ‘அனுப்பு’ என்ற பொத்தான். இதை அழுத்துவதன்மூலம், உங்கள் புது இடுகை(கள்) திரட்டியில் சேர்க்கப்படுகின்றன. அதே பட்டையில் உள்ள தெரிவுக்கட்டங்களை பயன்படுத்தி, பட்டையில் நீங்கள் விரும்பும் வசதிகளைக் காட்டவோ, மறைக்கவோ செய்யலாம். உதாரணமாக, வாசகர் பரிந்துரை வசதி வேண்டாம் என்று எண்ணுபவர், அதற்குக்கீழ் உள்ள கட்டத்தை தெரிவு விலக்குவதன்மூலம் இதைச் செய்ய முடியும். அல்லாமல் நீங்கள் தமிழ்மணத்தின் பெயரே எங்கும் காட்டக்கூடாது என்று விரும்பும் நண்பரானால் முழுக் கருவிப்பட்டையையுமே மறைக்கலாம்.

இரண்டாவது வழி, டெக்னொரட்டி போல நீங்களாக தமிழ்மணம் முகப்புக்கு வந்து உங்கள் பதிவின் சுட்டியை (இடுகையின் சுட்டி அல்ல) இடுவதன்மூலமும் உங்கள் புதிய இடுகையை சேர்க்கலாம். யாகூ வலைப்பதிவுகள் மற்றும் Wordpress MU செயலியைப் பயன்படுத்தும் http://wordpress.com வலைப்பதிவுகள் போன்ற பதிவருக்கு முழு உரிமை அளிக்காத அமைப்புகள் வழியாக வலைப்பதிவோர், அல்லது கருவிப்பட்டை நிறுவ இயலாதோர், இதைச் செய்யலாம்.

இரு வழிகளிலுமே, சேர்க்கைக்குப்பின், உடனே, எந்த தலைப்பில் இந்த இடுகை(களைச்) சேர்க்க வேண்டும் எனச் சொல்ல ஒரு வழி இருக்கும். அங்கே உங்கள் தேர்வை சொல்லலாம்.

5. வகைப்படுத்தலில் ஒரு தவறு நேர்ந்துவிடுகிறது. அப்போது எப்படி அதை சரி செய்வது?

ஒருமுறை வகைப்படுத்தப்பட்டவற்றை மறுபடி ஒரு வலைப்பதிவர் மாற்றும் உரிமை இப்போது இல்லை. ஆனால் நிர்வாகிகள் இதை செய்யமுடியும். எனவே நிர்வாகிகளுக்கு இந்த மாற்றத்தேவையை அறிவிக்க ஒரு எளிய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்காட்டி மூலம் எந்த நாளிலும் எழுதப்பட்ட எல்லா இடுகைகளையும் காணக்கூடிய பக்கமான http://thamizmanam.com/archives.php பக்கம் போய், குறிப்பிட்ட இடுகையில் உள்ள (மஞ்சள் முக்கோணம்) அறிவுறுத்தல் பொத்தானை சொடுக்கி, அதன்மூலம் வேண்டலாம். இது இயன்றவிரைவில் கவனிக்கப்பட்டு சரியான தலைப்பின்கீழ் வருமாறு செய்யப்படும்.

இதே அறிவுறுத்தல் பொத்தான்மூலம் ஆட்சேபகரமான இடுகை, ப்ளாக்கர் தவறால் எட்டப்படமுடியாத இடுகை, மற்றும் வலைப்பதிவர் தானே நீக்கிவிட்ட இடுகை ஆகியவற்றையும் சுட்டலாம்.

 
  faq_on_v.txt · கடைசியாக மாற்றப்பட்டது: 2018/01/17 23:21
 

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy
Valid XHTML 1.0!