Deprecated: Function set_magic_quotes_runtime() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php on line 33

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/auth.php on line 95

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php:33) in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/auth.php on line 176

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php:33) in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/index.php on line 43

Deprecated: Function split() is deprecated in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/common.php on line 715
toolbar [தமிழ்மணம் தகவல் களஞ்சியம்]

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /homepages/21/d718806694/htdocs/tamilmanam-net/tmwiki/inc/html.php on line 141


தமிழ்மணம் அளிக்கும் 'பதிவு' கருவிப்பட்டை

சேவையின் நோக்கம்:

வலைப்பதிவருக்கும் வாசகருக்கும் பயனாகும் பல கருவிகளை ஒரே இடத்தில் காட்டும்படியாக ‘பதிவு’ என்ற கருவிப்பட்டை நுட்பத்தை தமிழ்மணம் அறிமுகப்படுத்துகிறது. சில நிரல்துண்டுகளை தங்கள் அடைப்பலகையில் சேர்த்துக்கொள்வதன்மூலம் இந்த வசதியை எவரும் எளிதாக ஏற்படுத்திக்கொள்ளலாம்.

'பதிவு' கருவிப்பட்டை நிறுவும் வழிமுறைகள்

தமிழ்மணம்.காம் இதற்காக PHP & Javascript மூலம் இயங்கும் ஒரு சிறப்பு நிரல் தயாரித்தளிக்கிறது. கொடுக்கப்பட்ட இந்த நிரல்துண்டுகளை ஒரு வலைப்பதிவர், தன் வலைப்பதிவு அமைப்பில் சரியாக ஒரே ஒருமுறை சேர்த்துக்கொள்வதன் மூலம் ‘பதிவு’ கருவிப்பட்டை வசதியை பெறலாம்.

பதிவர் கருவிப்பட்டை

நீங்கள் உங்கள் பதிவில் புது இடுகையிட்ட பின், அந்த இடுகைப் பக்கத்திற்குச் சென்றால் நீங்கள் பதிவர் கருவிப்பட்டையை காணலாம். இந்த கருவிப்பட்டையின் மூலம், புது இடுகையைப் பற்றிய தகவலை தமிழ்மணத்திற்குத் தெரியப்படுத்தலாம். அதே சமயம், உங்கள் வலைப்பதிவிலுள்ள கருவிப்பட்டை செயல்பாட்டை அங்கே தேவைப்பட்டவாறு மாற்றிக்கொள்ளலாம்.

பதிவர் கருவிப்பட்டை

பின்குறிப்பு: கருவிப்பட்டைச் செயல்பாடு மாற்றம் மொத்த பதிவிற்கும் பொருந்தும், இடுகைவாரியாக மாற்ற இயலாது.

வாசகர் கருவிப்பட்டை

தமிழ்மணத்தில் பட்டியலிடப்பட்டு மேலும் ‘பதிவு’ கருவிப்பட்டை இணைக்கப்பட்டுள்ள இடுகைப் பக்கத்திற்குச் சென்றால், வாசகர் கருவிப்பட்டையைக் காணலாம். வாசகர் கருவிப்பட்டை பதிவர் விருப்பத்திற்கேற்ப தோற்றமளிக்கும்.இந்தக் கருவிப்பட்டையின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பல வசதிகளும் தாணுர்த்தியாக இருக்கின்றன.

கிட்டும் பயன்கள்

  • தங்கள் வாசகர்கள் ஒரு இடுகையை (pdf) மென்-நூலாக பெற்றுக்கொள்ள தங்கள் இடுகைப்பக்கத்திலேயே ஒரு சொடுக்கில் செய்யும் வசதியளித்தல்.
  • தாங்கள் எழுதிய இடுகைகளிலிருந்து தங்கள் வாசகர் விரும்பிய இடுகைகளை தேர்வு செய்து (pdf) மென்-நூலாக்கிக்கொள்ளும் வசதியளித்தல்.
  • எப்போதும் போல மறுமொழி நிலவரம் தமிழ்மணம் தளத்தில் காட்டப்படும் வசதி.

* ஒற்றைச் சொடுக்கில் + அல்லது - வாக்களிக்கும் வசதி.

  • தங்கள் வாசகர் தாம் வாசித்த இடுகையின் தலைப்பில் எழுதப்பட்ட மற்றவர்களின் இடுகைகளுக்கு ஒற்றைச் சொடுக்கில் பயணிக்க வசதியளித்தல்.
  • இத்துடன் வலைப்பதிவர் தங்கள் உருவம் (profile) பகுதியில் வைத்திருக்கும் படத்தையும் சிறு வில்லை வடிவில் தமிழ்மணத்தில் காட்டக்கூடிய வசதி. மாதிரியை இங்கே காணலாம்:

வ. கே. கேள்விகள்

  1. யார் மதிப்பிடுகிறார்கள்?
    பங்கெடுக்கும் வலைப்பதிவுக்கு வரும் வாசகர்கள் மட்டுமே ஒரு ஆக்கத்தைப் பற்றி தங்கள் மதிப்பீட்டை வாக்காக பதிவு செய்கிறார்கள்.
  2. மதிப்பீடு எப்படிக் கணக்கிடப்படுகிறது?
    வாக்களிக்கும் ஒவ்வொருவரும், குறிப்பிட்ட ஆக்கத்தை அருமை (+) அல்லது சுமார்(-) என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வதன்மூலம் தங்கள் மதிப்பீட்டை தெரிவிக்கிறார்கள்.
    இந்த மதிப்பீடு எண்ணாகக் காட்டப்படாமல் குறியீடாகக் காட்டப்படுகிறது. அதாவது மதிப்பீட்டை 1 முதல் 5 வரையிலான மதிப்பெண்ணாகக் கொண்டால், அதைக் குறிக்க 1 முதல் 5 நட்சத்திரம் காட்டப்படுகிறது.
    ஒரு ஆக்கம் பதிப்பிக்கப்பட்டு இதுவரை எந்த வாசகராலும் மதிப்பீடு செய்யப்படாமல் இருக்கும்போது அதன் மதிப்பீடு ‘வெற்று’ என்பதால் அப்போது எந்த நட்சத்திரமும் காட்டப்படாது. இன்னும் மதிப்பிடப்படவில்லை என்பதைக் குறிக்கும்வண்ணம் நீரெழுத்தாக அந்த நட்சத்திரங்கள் காட்டப்படுகின்றன.
    ஒவ்வொரு + வாக்கும் +1 மதிப்பெண்கள், ஒவ்வொரு - வாக்கும் -1 மதிப்பெண்கள் பெறும். இப்படி ஒருவர் பெறும் +/- வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவரின் நிகர மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. ஒரு ஆக்கம் தான் பெற்ற மதிப்பீடுகள் அனைத்தும் + மதிப்பெண்களாகப் பெற்றிருந்தால் அதிகபட்சமாக 5 நட்சத்திரங்களால் குறிக்கப்படும். அதே சமயம் அது அனைத்தும் - மதிப்பீடுகளாகப் பெற்றிருந்தால் உள்ளதில் குறைந்த நிகர மதிப்பீடாக 1 நட்சத்திரத்தால் குறிக்கப்படும்.
    கீழ்க்கண்ட உதாரணம் இதை விளக்கும்.

    வாக்களிப்போர் எண்ணிக்கை மிகக் குறைவாக (ஒரு ஆக்கத்துக்கு ஓரிரு வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்ட) நிலையில் இந்த முறை 1 நட்சத்திரம் என்ற அதீதத்துக்கும் 5 நட்சத்திரம் என்ற அதீதத்துக்கும் இடையே ஊசலாடுவது போலத் தோன்றினாலும், ஓரளவு வாக்குகள்(10+) அளிக்கப்பட்ட நிலையில் மைய அளவான 3 நட்சத்திரத்தின் அண்மையில் அமையும். 500 பேர் ஒரு நாளைக்கு வருகை தரும் தமிழ் மணம் தளத்தில் ஒரு 50 பேராவது தங்கள் வாக்குகளைப் பதித்தாலே இந்த முறை மிகவும் துல்லியமான, பாரபட்சமற்ற, பெரியோர் சிறியோர் பேதமற்ற ஜனநாயக மதிப்பீட்டு முறை என்பதை உணர முடியும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் அவசியம்.
  3. வாக்களிப்பின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது?
    ஒருவர் ஒரு ஆக்கத்தின்மேல் ஒருமுறைதான் வாக்களிக்க இயலும். ஒவ்வொரு ஆக்கத்துக்கும் வாக்களித்த கணினியின் IP எண் சேமிக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரே கணினியிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு ஆக்கத்துக்கு அளிக்க இயலாது. இருப்பதில் இது மிகவும் நம்பகமான முறையே. ஆனாலும் சில கணினிகள் வேறுவேறு சமயங்களில் வேறுவேறு IP எண்ணுடன் இணையத்தொடர்பில் இருப்பது சாத்தியமே. மேலும் ஒருவரே தன் அலுவலக்கணினி, நண்பரது கணினி, இல்ல மேசைக்கணினி, மடிக்கணினி என்று பல கணினிகளில் வாக்களிப்பதையும் இது கட்டுப்படுத்த இயலாது. அதிக எண்ணிகையில் வாக்குகள் அளிக்கப்படும்போது இந்த சிறு சாத்தியங்கள் பெரிய அளவில் மதிப்பீடுகளைப் பாதிக்காது.
  4. அப்படியானல் வாக்களிப்பு ரகசியமானதில்லையா?
    முழுக்க முழுக்க ரகசியமானது. அதில் எந்த ஐயமும் தேவையில்லை. சேமிக்கப்படுவது IP எண் மட்டுமேதவிர, எந்த IP + அளித்தது எது - அளித்தது என்ற விவரம் எங்கும் சேமிக்கப்படுவதில்லை. எனவே யாரும் தைரியமாக நேர்மையாக தங்கள் மதிப்பீட்டை வாக்களிக்கலாம்.
  5. இதுவரை எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?
    காட்டப்படும் நட்சத்திரக்குறீயீட்டின் மேல் மூசி (mouse) யை நகர்த்தினால் தற்போதைய நிகர மதிப்பெண்ணையும், இதுவரை அந்த ஆக்கத்துக்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையையும் அறிந்துகொள்ளலாம்.
 
  toolbar.txt · கடைசியாக மாற்றப்பட்டது: 2018/01/17 23:21
 

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy
Valid XHTML 1.0!